அரியானாவில் கோர விபத்து: பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி!
Sep 12, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரியானாவில் கோர விபத்து: பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி!

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 03:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரியானா மாநிலம் நர்னால் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம், மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

அரியானா மாநிலம் நர்னால் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வாகனம் எப்போதும் போல் மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

உன்ஹானி கிராமம் வழியாக வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனை அடுத்து, தாறுமாறாக சென்ற வாகனம் மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்த மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்துள்ளது. மேலும், இன்று பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில், இந்த தனியார் பள்ளி இயங்கியதாக கூறப்படுகிறது. பள்ளி வாகனத்திற்கான உரிமம் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியானது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று கூறினார்.

Tags: Haryanaschool bus accident
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கூட வழங்கப்படவில்லை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Next Post

வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies