தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக மழை!
Oct 6, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக மழை!

Murugesan M by Murugesan M
Jun 7, 2024, 01:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன முதல் அதிகன மழை பெய்துள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர் பஜார், தான்தோன்றி மலை, வெண்ணமலை, வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து குளிர்காற்றுடன் கனமழை பெய்தது. வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதே போல, திருச்சியில் ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலை, அண்ணா சிலை, தில்லை நகர், உறையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையின் காரணமாக சாலைகளில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.

உதகை, குன்னூர் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி என அனைத்து இடங்களிலும் கனமழை பெய்த நிலையில், நீர் ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழை காரணமாக கேத்தி பாலாடா, கூக்கல்தொரை, மசக்கல் பகுதியில் பயிரிடப்பட்ட கேரட், வெள்ளை பூண்டு, பீட்ரூட் உள்ளிட்ட மலைக் காய்கறி பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகர்கோவில், தக்கலை, அழகியமண்டபம், மேக்காமண்டபம், மார்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடைவிடாது மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ரெட்டிதோப்பு ரயில்வே மேம்பாலப் பகுதியில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags: Heavy rain in various parts of Tamil Nadu!
Share
Tweet
SendShare
Previous Post

ஜவர்ஹலால் நேருவின் சாதனையை மோடி முறியடித்து விட்டார்! – அர்ஜுன் சம்பத்

Next Post

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க இன்னும் அதிகமாகப் பணியாற்ற விரும்புகிறோம்!- பிரதமர் மோடி

Related News

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

Load More

அண்மைச் செய்திகள்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies