உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
புல்ராய் கிராமத்தில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 121 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கியதாக தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.