சட்டசபையில் தடை செய்யப்பட்ட புகையிலையை கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தின்போது சட்டசபைக்குள் புகையிலை கொண்டு சென்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அப்போதைய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அமைக்கப்பட்ட உரிமைக்குழுவை உயர்நீதிமன்ற நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து அதிமுக சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.