ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் எல்லையில் கண்காணிப்பை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் சம்பா பகுதியில் ரோந்து சென்ற ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தது தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, சம்பா எல்லையில் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.