தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில் ஸ்ரீசைலம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 4 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 3 மதகுகள் மூலம் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.