அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் மாற்றி எக்ஸ் தளத்தில் வீடியோ பகிரப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா அதிபா் தோ்தல் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
கமலா ஹாரிஸின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.