கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு! - விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - உச்சநீதிமன்றம்!
Aug 16, 2026, 04:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு! – விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! – உச்சநீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 01:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லாததை எண்ணி உச்சநீதிமன்றம் கவலைக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் அரசியலமைப்பின் கீழ் சமத்துவம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினர்.

பெண் மருத்துவரின் மரணத்தை தற்கொலை என்று மருத்துவமனை நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கையில் கொலை என்று ஏன் பதிவு செய்யவில்லை என சாடினர்.

மருத்துவமனை இயக்குநர் எப்போது இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார் என வினவிய நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தங்களது பணியை தொடருமாறு கேட்டுக்கொண்டனர்.

மருத்துவர்கள் மற்றும் பெண் மருத்துவர்களை பாதுகாப்பது என்பது தேசிய நலன் சார்ந்த விஷயம் எனக்கூறிய நீதிபதிகள், மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்படும் என தெரிவித்தனர்.

அந்த குழுவில், உள்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய மருத்துவ ஆணைய தலைவர், தேசிய தேர்வாளர்கள் குழு தலைவர் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இடம்பெறுவார்கள் என நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நிலை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: Kolkata woman doctor case! - Adjournment to the 22nd hearing! - The Supreme Court!
Share
Tweet
SendShare
Previous Post

மேக வெடிப்பு காரணமாக வெளுத்து வாங்கிய கனமழை!

Next Post

ரூ.5,120 கோடி வருவாய் ஈட்டிய பிசிசிஐ!

Related News

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies