கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை! - எல்.முருகன் கண்டனம்!
Oct 18, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை! – எல்.முருகன் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 03:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு பாஜக  சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மாபெரும் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க ஆட்சி அமைத்துள்ளார். மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்த உடன் ஏழை மக்களின் நலனுக்காக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்று கோடி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இரண்டாவது கையெழுத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கான நிதியை வழங்கியுள்ளார். இந்த நாட்டை பிரதமர் மோடி வேகமான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வேகம் மிக அதிகமாக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், துறைமுகத்தை மேம்படுத்துதல் என இந்த அரசு மிக வேகமாக வளர்ச்சி பணிகளை செய்வதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றாததை மிகப்பெரிய செயலாக நான் பார்க்கிறேன். இதை பாஜக வன்மையாக கண்டித்து உள்ளது.

பிரதமர் தூத்துக்குடிகக்கு ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக தூத்துக்குடி – மதுரை இரட்டை ரயில் பாதை திட்டம் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. ஓடுதளம் மட்டும் மூன்று கிலோ மீட்டர் தூரம். அதாவது சென்னையை விட மிகப்பெரிய ஓடுதளம் கொண்ட விமான நிலையமாக மிகப்பெரிய ஏர்பஸ் வசதி கொண்ட விமான நிலையமாக அமைந்து வருகிறது.

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் பலாதாரம், வன்மையாக கண்டிக்க கூடிய சம்பவம். கோவையிலும் நேற்று இது போன்று நடந்துள்ளது. இதையெல்லாம் தமிழக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை பெற்று தர வேண்டும் எனத் வலியுறுத்தினார்.

கொல்கத்தாவில் இதுபோன்று மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. அங்கு அரசு சரியான நடவடிக்கையாக எடுக்காததால் அந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றுள்ளது.

மாநில அரசு மருத்துவர்களுக்கு முறையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மருத்துவர்கள் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பி உள்ளது எனத் தெரிவித்தார்.

நாணய வெளியீட்டு விழா ஒரு அரசின் விழா‌. இது எந்தவித அரசியலுக்கும் அப்பாற்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்துவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,

இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் தமிழ்நாட்டின் துணை முதல்வராக வருவதால் தமிழ்நாட்டில் திமுக ஒன்றும் பெரிய மாற்றம் இருக்காது.

தமிழ்நாட்டின் அமைச்சர்கள், திமுக என்னென்ன செய்து வருகிறதோ அதை அவர்கள் இன்னும் அதிகமாக செய்வார்கள். அதாவது தமிழ் மக்களுக்கு என்னென்ன தீங்கு செய்து வருகிறார்களோ அது இன்னும் அதிகமாகும் என்றார்.

Tags: Krishnagiri student sexually assaulted! - L. Murugan condemned!
Share
Tweet
SendShare
Previous Post

மகாராஷ்டிராவில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! – ரயில் மறியல்

Next Post

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க மாவட்ட தலைவர் கைது!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies