தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரத ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பெண்கள் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததால், பாரத ராஷ்டிர சமிதி தலைவர் ராமராவ், மாநில மகளிர் ஆணைய அலுவலகத்துக்கு விசாரணைக்காக சென்றார்.
அப்போது அவரின் காரை முற்றுகையிட்ட காங்கிரஸ் பெண் தொண்டர்கள், ராமராவ் மன்னிப்பு கேட்க வேண்டுமென முழக்கமிட்டனர். இதனிடையே, ராமராவுக்கு ஆதரவாக பாரத ராஷ்டிர சமிதி தொண்டர்கள் அங்கு திரண்டதால், அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.