மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில் தமிழக அரசு மீதான நடவடிக்கையை உச்சநீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் தமிழக தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆஜராகினார்.
அப்போது, தமிழக அரசு தரப்பில், சட்டத்துறை அதிகாரிகளின் ஊதிய விவகாரத்தில் உரிய நிதியை ஒதுக்கி, அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சட்டத்துறை அதிகாரிகளுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு மீதான நடவடிக்கை கைவிடப்படுவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
மேலும், 4 வாரத்தில் பணப்பலன்களை வழங்குவதற்கான பணிகளை நடைமுறைபடுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசு மீதான நடவடிக்கையை முடித்து வைப்பதாக அறிவித்தது.