பாரா ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்ற தமது கனவு பல தடைகளைத் தாண்டி நிறைவேறி உள்ளதாக காஞ்சிபுரம் திரும்பிய துளசிமதி முருகேசன் தெரிவித்துள்ளார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலையில் இருந்து டி.கே. நம்பி தெரு, தேரடி தெரு, ரங்கசாமி குளம் வரை பேண்ட் வாத்தியங்கள் முழங்கவும், வழியெங்கும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துளசிமதி முருகேசன், சிறு வயதில் இருந்தே பெற்ற பயிற்சியும், தனது அப்பா கொடுத்த உற்சாகமும்தான் வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார்.