கேரள மாநிலம் மலப்புரத்தில் நிஃபா வைரசால் பாதிக்கப்பட்ட 24 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
அவருடன் தொடர்பில் இருந்ததாக 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அதில், ஐந்து பேருக்கு லேசான அறிகுறி கண்டறியப்பட்டதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வகத்துக்கு அவர்களது ரத்த மற்றும் சளி மாதிரி அனுப்பப்பட்டுள்ளது.