துபாயில் நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது விக்ரமுக்கு வழங்கப்பட்டது.
சைமா விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான சைமா விருது வழங்கும் விழா துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கடந்த 2 நாட்களாக நடைபெற்ற விழாவில், தென் இந்திய திரையுலகின் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதில், சிறந்த நடிகருக்கான விருது பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்திற்காக விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கான விருது அன்னபூர்ணா படத்துக்காக நயன்தாராவுக்கும் வழங்கப்பட்டன.
அதேபோல விமர்சகர்கள் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராய்க்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், ரஜினியின் ஜெய்லர் படத்துக்கு 5 விருதுகள் வழங்கப்பட்ட நிலையில்,
தசரா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை கீர்த்தி சுரேஷ் தட்டிச்சென்றார்.