புனித பிரசாதமாக கருதப்படும் திருப்பதி லட்டில் கலப்படம் செய்து களங்கப்படுத்தியது மன்னிக்க முடியாத பாவம் என மத்திய அமைச்சர் பாண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் மத்திய அமைச்சரும், பாஜக பொதுச் செயலாளருமான பாண்டி சஞ்சய் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டது தொடர்பாக ஆந்திர அரசு உடனடியாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ஆந்திராவில் கடந்த ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வாரியத்தில் பிற மதத்தினர் இடம் பெற்றதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் எனவும் பாண்டி சஞ்சய் குமார் குற்றம்சாட்டினார்.