இலங்கை புதிய அதிபர் அனுர குமார திசநாயகே - அத்தியாயம் படைப்பாரா தோழர்? சிறப்பு கட்டுரை!
Jul 20, 2026, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை புதிய அதிபர் அனுர குமார திசநாயகே – அத்தியாயம் படைப்பாரா தோழர்? சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுர குமார திசநாயக்கேவின் அரசியல் பயணம் பற்றி விவரிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு…

இலங்கைக்கு தேவை பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல.. அரசியல் சித்தாந்த ரீதியிலான மாற்றமும் தான் என பரப்புரை செய்த அனுர குமார திசநாயக்கே-வை புதிய அதிபராக அந்நாட்டு மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

கடந்த அதிபர் தேர்தலில் வெறும் 3.16 சதவிகித இலங்கை மக்களின் ஆதரவை பெற்றிருந்த அனுர குமார-வின் கட்சி இந்த முறை அதிபர் பதவியை எட்டியது எப்படி என்ற பின்னணியை ஆய்வு செய்யும் போது, கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்த அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையை இலங்கை மக்கள் இழந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே, கடந்த 2 ஆண்டுகளில் நாட்டை மேம்படுத்த என்னால் முடிந்ததை செய்து விட்டேன், இன்னும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என பரப்புரையில் பேசியிருந்தார். அதேபோல், மற்றொரு வேட்பாளரான சஜித் பிரேமதாச, தன்னுடைய குடும்பத்தின் அரசியல் பின்னணி மற்றும் பிரேமதாசாவின் மகன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

ஆனால், முந்தைய ஆட்சியாளர்களையும், அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் நிராகரித்த இலங்கை மக்கள், கம்யூனிச சித்தாந்தம் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனா என்ற மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் வேட்பாளர் அனுர குமார-வை அதிபராக தேர்வு செய்துள்ளனர்.

கடந்த 1968-ல், இலங்கை அனுராதபுரத்தில், கூலித் தொழிலாளியின் மகனாக பிறந்த அனுர குமார கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் ஜனதா விமுக்தி கட்சியில் மாணவர் அமைப்பில் இணைந்தார்.

அப்போது வரை ஆயுதமேந்தி போராடி வந்த அக்கட்சி, 1990-களுக்கு பிறகு இனி ஜனநாயக ரீதியிலான அரசியலை மட்டுமே முன்னெடுப்போம் என அறிவித்தது. 1995-ல் சோசியலிச மாணவர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக தேர்வான அனுர குமார, ஜனதா விமுக்தி கட்சியின் மத்திய குழுவிலும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் இடம் பிடித்தார்.

கடந்த 2000-மாவது ஆண்டில் நடந்த இலங்கை எம்.பி. தேர்தலில் வென்ற அனுர குமார, இலங்கை விவசாயத்துறை அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி விகித்தவர்.

இலங்கை ஜனநாயக அரசியலுக்கு அனுர குமார புதியவர் அல்ல என்றாலும், கடந்த கால ஆட்சியாளர்கள் மக்களின் நம்பிக்கையை காப்பாற்றாமல், வெளிநாடுகளிடம் இலங்கையை அடகு வைத்து விட்டனர் என்ற பரப்புரை அந்நாட்டு மக்களை அவருக்கு ஆதரவாக இந்த அதிபர் தேர்தலில் வாக்களிக்கச் செய்துள்ளது.

இலங்கை அரசியலில் கம்யூனிச சித்தாந்தம் கொண்ட கட்சியை சேர்ந்த அனுர குமாரவின் வெற்றி, வரலாற்றுப் பாய்ச்சலாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் என்றால், இந்தியா தரப்பில் அனுர குமார-வுடன் கடந்த பிப்ரவரி மாதமே ஒரு முக்கிய சந்திப்பு நடத்தப்பட்டது.

மத்திய பாரதிய ஜனதா அரசின் அழைப்பை ஏற்று டெல்லி வந்த அனுர குமார, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து தெற்காசிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனையும் நடத்தினார்.

இந்தியா மட்டுமின்றி சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கை அதிபர் தேர்தலை உற்று நோக்கி வந்த நிலையில், அனுர குமார திசநாயகே வெற்றி வாகை சூடி இருக்கிறார். பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை தேசத்தை, மீட்டெடுக்கும் மாபெரும் சவால் அனுர குமார-வின் முன்பாக இருக்கும் இந்த சூழலில், அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே இலங்கை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags: anata Vimukti Peramuna partysri lankaAnura Kumara DissanayakeSri Lankan presidential electionRanil Wickramasinghe
ShareTweetSendShare
Previous Post

தென்காசி அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ZOHO நிறுவனம் சார்பில் புதிய வீடுகள்!

Next Post

ஈசன் அருள் பாலிக்கும் திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோயில் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Load More

அண்மைச் செய்திகள்

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies