துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதெல்லாம் காங்கிரஸ் வெள்ளைக் கொடி காட்டியதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் குண்டுகள் மூலம் பாகிஸ்தானின் துப்பாக்கிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சியால் மக்கள் சோர்வடைந்து விட்டதாக தெரிவித்தார்.
, அவர்கள் ஆட்சியில் நிலவிய ஊழல், வேலைவாய்ப்பில் பாகுபாடு மற்றும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றையும் மக்கள் விரும்பவில்லை எனக் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் மக்கள், அமைதியையும், குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தையும் விரும்புவதால், பா.ஜ.க ஆட்சி வர வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார். குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மீது இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
ஜம்மு-காஷ்மீரில் முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டதாகவும் மோடி கூறினார்.