முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவித்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
டெல்லி முதலமைச்சர் அதிஷி விஜய்காட்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.