ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், 11 லட்சம் 71ஆயிரம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில்வே மேலாளர்கள் , ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பாயிண்ட்மேன் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது.இந்த போனஸ் தொ வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக 2 ஆயிரத்து 29 கோடி செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.