சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கியுள்ள பிரதமர் மோடிக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன், நன்றி தெரிவித்துள்ளனர்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், தமிழக மக்களின் நலன் மீது கவனம் செலுத்தும் விதமாக, தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களை வழங்கி வரும் பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ள அவர்,
சென்னை மாநகரை நான்கு திசைகளிலும் இணைக்க வழிவகை செய்யும்
இந்த திட்டத்திற்கு, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.