தமிழகத்திற்கு உரிய நிதி பங்களிப்பை வழங்குவதில் பிரதமர் மோடிக்கு எப்பொழுதும் ஆர்வம் உண்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள், இனி சீராக முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், திமுக முக்கிய அமைச்சரவை பொறுப்புகளை கையில் வைத்திருந்த போதும், தமிழகத்திற்கான நிதியை கேட்டு பெறுவதில் கோட்டை விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.