புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில், புதுக்கோட்டை ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.
புதுக்கோட்டை சந்தப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த சந்தையில் புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பலர் தங்களது ஆடுகளை விற்பனை செய்ய எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மந்த நிலையில் இருந்த ஆடு விற்பனை, தற்போது புரட்டாசி மாதம் முடிவடைந்துள்ளதால் களைகட்டியுள்ளது. கடந்த 4 வாரங்களாக 50 லட்சம் ரூபாயை தாண்டாத ஆடு விற்பனை, இந்த வாரம் ஒன்றரை கோடி ரூபாயை எட்டியுள்ளது.
அதேபோல் இங்கு வெள்ளாடு 7 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையிலும், செம்மறி ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.