சென்னையில் மழை விட்டு 2 நாட்களாகியும் செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாததால் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் கனமழை பெய்த நிலையில், நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகின.
இதை தொடர்ந்து மழை படிப்படியாக குறைந்தவுடன் மோட்டார் பம்புகள் கொண்டு தேங்கியிருந்த மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. தற்போது மழை விட்டு 2 நாட்களை கடந்துள்ள நிலையில், புறநகர் பகுதியான செங்குன்றத்தில் இன்னும் மழை நீர் வடியாமல் உள்ளது.
மேலும், மழைநீரை அகற்ற அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள குடியிருப்புவாசிகள், தேங்கியுள்ள மழைநீரால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.