சென்னை மெரினாவில் ஆண் நண்பருடன் தகராறில் ஈடுப்பட்ட பெண், ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த தனலட்சுமி மற்றும் சந்திரமோகன் ஆகியோரை வீட்டிற்கு கிளம்புமாறு அறிவுறுத்திய போலீசாரை, அவர்கள் இருவரும் ஆபாசமாக பேசினர். .
இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் ஜாமீன் கோரி தனலட்சுமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், தன்னுடன் இருந்த ஆண் நண்பர் சந்திரமோகன்தான் காவல்துறையுடன் தகராறு செய்ததாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், எனவே, தமக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 28 -ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.