இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாஜகமாநிலத் துணைத்தலைவரும், விவாத மேடைகளில் கருத்துக்களைத் தெளிவாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்தும் அண்ணன் நாராயணன் திருப்பதி அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது சமூகப் பணிகள் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.