குஜராத் மாநிலம் வதோதராவில் டாடா குழுமத்துக்கு சொந்தமான ராணுவ விமான தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ SANCHAZ கூட்டாக திறந்து வைத்தனர்.
வதோதராவில் ராணுவ விமான தயாரிப்பு ஆலைலையை டாடா குழுமம் நிறுவியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ‘ஏர்பஸ் ‘ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டு இந்த ஆலைக்கு பிரதமர் மோடி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
ராணுவத்திற்கு தேவையான C2 ரக விமானங்கள் தயாரிக்கப்பட உள்ள இந்த ஆலை நாளை முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ SANCHAZ ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை இருவரும் நேரில் பார்வையிட்டனர். முன்னதாக திறந்தவெளி வாகனத்தில் பேரணி மேற்கொண்டனர்.
அப்போது, சாலையின் இருபுறமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு, பொதுமக்கள் மூலம் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.