திமுகவை எந்த சக்தியாலும் அசைத்துப் பார்க்க முடியாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பினனர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியிளித்தார்.
அப்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். திமுகவை எந்த சக்தியாலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று என தெரிவித்தார். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவதாக விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என கூறினார்.