ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அக்னூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அக்னூர் வழியாக சென்ற ராணுவ வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் மீது பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில், பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், இருவர் தப்பியோடினர். ஏறத்தாழ 8 மணி நேரமாக பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், ராணுவ மோப்ப நாயும் உயிரிழந்தது. இதையடுத்து தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், 27 மணிநேர தேடுதல் வேட்டைக்குப் பின்னர், தப்பியோடிய 2 பயங்கரவாதிகளும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.