சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி கலந்தாய்வு கூடத்தில், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் மொத்தம் 19 லட்சத்து 41 ஆயிரத்து 271 ஆண் வாக்காளர்களும், 20 லட்சத்து 09 ஆயிரத்து 975 பெண் வாக்காளர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 25 ஆயிரத்து 628 ஆண் வாக்காளர்களும், 27 ஆயிரத்து 669 பெண் வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.