சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் அமரன் திரைப்படத்தை பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கண்டுகளித்தனர். திரைப்படம் குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துக்களை செய்தி தொகுப்பாக தற்போது பார்க்கலாம்.
தீபாவளிக்கு வெடிக்கிற பட்டாசு போல தியேட்டர்ல தெறிச்ச தோட்டா தான் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனுடைய வாழ்க்கை வரலாற மையமா வெச்சு எடுக்கப்பட்ட படம்ன்னாலும் இப்ப உள்ள காலக்கட்டத்துல ஒரு ரியல் ஸ்டோரிய படம்மா எடுத்தா மக்கள் அக்சப்ட் பன்னிப்பாங்களான்னா அது எடுக்கிற விதத்த பொறுத்து தான். ஆனா இந்த தீபாவளிக்கு வெளியான அமரன் படத்த மக்களும், அரசியல் பிரமுகர்களும் கொண்டாடி வராங்க.
இந்த படத்தோட சிறப்பு காட்சிகள் பலருக்கு போட்டு காமிச்சாலும் இந்த சிறப்பு காட்சி நமக்கு ரொம்ப ஸ்பெஷல். காரணம் சென்னை நுங்கம்பாக்கத்துல இருக்கிற லீ மேஜிக் தியேட்டர்ல திரையிட்டாங்க. இதுல பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, ஆர்.எஸ். எஸ் மாநில இணைச் செயலாளர் இராம. ராஜசேகர், ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக பொறுப்பாளர் சூரியா ராமதாஸ், தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் கே.மது, நிர்வாக ஆசிரியர் தில்லை இப்படின்னு பலர் கலந்துக்கிட்டாங்க.
இப்படி இருக்கையில படம் பார்த்து முடிச்சிட்டு வெளிய வரப்ப இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமியையும், நடிகர் சிவகார்த்திகேயனையும் படம் பார்த்தவங்க புகழ்ந்து தள்ளிட்டாங்க.
பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெ ச். ராஜா, அமரன் படம் சிறந்த தேச பக்திப் படம் அப்படின்னு பிரதமர் மோடி இந்த படத்த கட்டாயம் பார்க்கனுன்னும் சொல்லிருப்பாரு.
இந்த படத்த நெறைய பேரு பாராட்டுறாங்க அப்படின்னு நெகிழ்ச்சியா சிவகார்த்திகேயன் சொல்லிருப்பாரு.
ஒட்டுமொத்தமா சொல்லனுன்னா படத்துல லவ், ஆர்மி லைப்புன்னு அடுத்த காட்சிகள் மனசுல துளைய போட்டு செட்டி ஆகிறுச்சு. இந்த அமரன் படத்த பாத்து முடிச்சிட்டு கண் கலங்காதவங்க ரொம்ப குறைவு. மொத்தத்துல மேஜர் முகுந்த்வரதராஜனுக்கு மெல் விடை கொடுக்க முடியாமல் 10 வருடங்களுக்கு பின் மெல்ல மெல்ல விடை கொடுத்து வருகின்றனர்.