திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம், கடந்த ஜனவரி மாதமே திறக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு திறக்க திட்டமிட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சபூரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை, அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, பேருந்து நிலைய பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், பொங்கல் பண்டிகைக்கு திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளதாக நேரு தெரிவித்தார்.