நாகையில் கன மழை ஓய்ந்துள்ள நிலையில், குறுவை நெல்மணிகளை காப்பாற்ற விவசாயிகள் இரவோடு இரவாக அறுவடை பணிகளில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று 10 சென்டி மீட்டருக்கு அதிகமான கனமழை கொட்டி தீர்த்தது. வேதாரண்ய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக 40 சென்டி மீட்டருக்கு அதிகமான கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
மேலும் மேட்டூர் அணையிலிருந்து குறித்த நேரத்திற்கு குறுவைக்கு தண்ணீர் திறக்காததால் மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1700 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விலை நிலங்களில் சாய்ந்துள்ளது.
இந்த மழை நீடித்தால் முற்றிலுமாக குறுவை சாகுபடி நெல்மணிகள் உதிர்ந்து முளைத்து விடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதல் மந்தமான வானிலை நீடித்ததால் விவசாயிகள் குருவை அறுவடை தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனால் இரவோடு இரவாக அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏக்கருக்கு 30 மூட்டை விளைச்சல் இருக்கும் என எதிர்பார்த்து இருந்த விவசாயிகளுக்கு இந்த மழையால் பத்து மூட்டை மட்டுமே கிடைக்கும் என வேதனை தெரிவிக்கின்றனர்.