நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு - டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!
Apr 16, 2026, 01:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 22, 2024, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்புக்கு மீண்டும் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளதாகவும், வெளிச்சந்தையில் விலை உயர தமிழக அரசே துணை போகிறதா என பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

சென்னை மாநகரில் உள்ள பெரும்பான்மையான நியாயவிலைக்கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம்பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்துக் கடைகளிலும் அடுத்த சில நாட்களில் வந்து விடும் என்ற பதில் தான் கிடைக்கிறதே தவிர, துவரம்பரும்பு வினியோகிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய விவகாரங்களில் காட்டப்படும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.

சென்னையில் மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளில் பருப்பு வினியோகிக்கப்படவில்லை. நவம்பர் மாதம் தொடங்கி 22 நாட்கள் ஆகி விட்ட நிலையில், பல நியாயவிலைக்கடைகளுக்கு வெறும் 200 கிலோ துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பெரும்பாலான கடைகளுக்கு துவரம் பருப்பே வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

நியாயவிலைக்கடைகளில் தடையின்றி துவரம் பருப்பு வழங்குவது சாத்தியமாகாத ஒன்றல்ல. அது மிகவும் எளிதான ஒன்று தான். ஆனால், அதைக் கூட தமிழக அரசால் செய்ய முடியாதது ஏன்? என்பது தான் தெரியவில்லை.

நியாயவிலைக்கடைகளில் துவரம் பரும்புக்கு தட்டுப்பாடு ஏற்படுவது இது முதல் முறையல்ல. கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்களவைத் தேர்தல் வந்ததால், பருப்பு, பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை இறுதி செய்ய முடியாததால் தான் தாமதம் ஏற்பட்டதாகவும், இனி தாமதம் ஏற்படாது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், இப்போது அக்டோபர், நவம்பர், திசம்பர் ஆகிய 3 மாதங்களுக்குத் தேவையான துவரம் பருப்புக்கான கொள்முதல் ஆணைகள் கடந்த செப்டம்பர் மாதமே வழங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசே தெரிவித்த பிறகும் கூட நவம்பர் மாதத்தில் பற்றாக்குறை நிலவுவது ஏன்?

நியாயவிலைக்கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதன் நோக்கமே வெளிச்சந்தையில் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்துவது தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு முறையாக வழங்கப்படாததால் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.180 ஆக இருந்த ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை இப்போது ரூ.210 ஆக உயர்ந்திருக்கிறது.

வெளிச்சந்தையில் பருப்பு விலை உயருவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு நியாயவிலைக்கடைகளில் பருப்பு வழங்கலை தாமதப்படுத்துகிறதா? என்பது தெரியவில்லை.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பசியாறுவதற்கு நியாயவிலைக்கடைகளில் மலிவு விலையில் வழங்கப்படும் பருப்பு மிகவும் முக்கியம் ஆகும். இதை உணர்ந்து கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு தடையின்றியும், தாமதமின்றியும் வழங்கப் படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: chennai ration shopstamilnaduDr Ramadossration shopsdal distribution issue
ShareTweetSendShare
Previous Post

நாகையில் குறைந்தது மழை – இரவோடு இரவாக அறுவடை பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள்!

Next Post

சுமார்1 கோடி வாடிக்கையாளர்களை இழந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் – செல்போன் கட்டண உயர்வு காரணமா?

Related News

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies