ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் கடந்த 13-ஆம் தேதி 43 தொகுதிகளுக்கும், 20-ஆம் தேதி 38 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிட்டது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியதும், பாஜக, காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களிலும், பாஜக கூட்டணி 30 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.