அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் திருக்கோயில் பணியாளர்களுக்கும் மாதத்தின் இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழு கூட்டத்தில், திருக்கோயிலில் 3 ஆண்டுகள் தினக்கூலியாக பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் உள்ள திருக்கோயில் நிலைகளை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.