மதுரையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தரப்பினரும், டாக்டர் சரவணன் ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
அதிமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜு ஏற்பாட்டில், கள ஆய்வுக்கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் நடைபெற்றது. அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர் செம்மலை ஆகியோர் முன்னிலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், தங்களை பேச அனுமதிக்க வேண்டும் எனக் கூறி செழியன், சரவணன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னாள் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தரப்பினருக்கும், டாக்டர் சரவணன் ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.