விழுப்புரத்தில் பாயும் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது.
குறிப்பாக, விழுப்புரத்தில் கனமழை பெய்ததில் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கானிமேடு, மண்டகப்பட்டு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், 25 கிலோ மீட்டர் சுற்றி மரக்காணம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் இருந்து வெளியேறும் தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.