சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வேளச்சேரி பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
வங்கக்கடலில் இன்று ஃபெங்கல் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசித்துவரும் மக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, வேளச்சேரியில் உள்ள டான்சி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள், தரை தளங்களை காலி செய்தனர். தங்களது உடமைகளை பாதுகாக்கும் நோக்கில், பொருட்களை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அதே வேளையில், மழை பாதிப்பு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதால் படகுகள் வரவழைக்கப்பட்டு அவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.