11 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை வெளியில் அழைத்து செல்லப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.
இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமீ தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோயிலில் உள்ள 26 வயதான தெய்வானை என்ற யானை தாக்கி அதன் பாகன் உட்பட 2 பேர் கடந்த 18ம் தேதி உயிரிழந்தனர். இதை தொடர்ந்து தனி அறையில் வைக்கப்பட்ட தெய்வானை யானையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், 11 நாட்களுக்கு பின் தற்போது யானை வெளியில் அழைத்து செல்லப்பட்டது. தொடர்ந்து கோயிலில் உள்ள ஆனந்த விலாச மண்டபத்தில் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.