தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 அதிகரித்துள்ளது.
ஒரு சவரன் ரூ. 57,280-க்கும், ஒரு கிராம் ரூ. 7,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,665-க்கும் ஒரு சவரம் ரூ. 61,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கடந்த ஒரு வாரமாக மாற்றமில்லாமல் விற்பனையான நிலையில், இன்று காலை கிராமுக்கு ரூ. 2 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 100-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.