திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேமலைகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி – அலமாத்தாள் தம்பதி, அதே ஊரில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தனர்.
இவர்களது மகன் செந்தில்குமார் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று பெற்றோருடன் தோட்டத்து வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு இவர்களது தோட்டத்து வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், மூவரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அவிநாசி பாளையம் காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.