ஜெ.பி.நட்டாவின் ஆற்றல் மிக்க தலைமை பாஜகவை உச்சகட்ட புகழை நோக்கி வழிநடத்துவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமைலை புகழாரம் சூடடியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது : ஜெ.பி.நட்டாவின் ஆற்றல் மிக்க தலைமை பாஜகவை அதன் உச்சகட்ட புகழை நோக்கி வழிநடத்தி வருகிறது. தேசம் பற்றிய அவரது பார்வை முதலில் அவர் மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பொது மக்களுக்கு அவர் செய்த தன்னலமற்ற சேவையை எடுத்துக்காட்டுகிறது.
அவர் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
இதேபோல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் ஜெ..பி. நட்டா நல் ஆரோக்யத்தோடும், நீண்ட ஆயுளோடும் தேசப்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.