போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு - மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
Jun 14, 2026, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு – மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Murugesan M by Murugesan M
Dec 5, 2024, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் வைத்திருந்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சென்னை அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்வோருடன் தொடர்பில் இருந்ததுடன், போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்பட 7 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அலிகான் துக்ளக்கிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, கைதான 7 பேரையும் டிசம்பர் 18-ஆம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் கிடைப்பதால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருள் என்னவாகிறது என்பது தெரியவில்லை என கூறிய அவர் தமிழக அரசு ஒட்டுமொத்தமாக டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: judicial custodydrug dealers.Ambattur courtMansoor Ali Khan's sonJ.J. Nagar police
ShareTweetSendShare
Previous Post

வங்க தேசத்தில் கொல்லப்படுகிற இந்துக்கள் மனிதர்களாக தெரியவில்லையா? – முதல்வருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

Next Post

ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்புக்காட்சி – கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies