திருச்சி மாநகரில், மாரீஸ் புதிய மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே, பாலப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி கோட்ட தெற்கு ரயில்வேயும், திருச்சி மாநகராட்சியும் இணைந்து, பல கோடி ரூபாய் மதிப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
மேம்பாலத்தில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சிங்காரத்தோப்பு மற்றும் பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளதாகவும், இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.