மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தமிழக பாஜக குழுவினர் டெல்லியல் சந்தித்தனர்.
விழுப்புரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மற்றும் பிற மாவட்டங்களில் கடுமையான புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரண உதவிகள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாஜக குழுவினர் மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் ஹர்தீப் சிங் புரியை சந்தித்தனர். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், மற்றும் karthiyayiny
மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், தேசிய செயற்குழு உறுப்பினர் வரதராஜன்,
மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.