விருதுநகரில் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் மாரிமுத்து என்பவர், பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த 4 நபர்கள், வாகனங்களை வழிமறித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர்.
இதுகுறித்து தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.