இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான முதல் நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. .இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதனால் அடுத்தடுத்த போட்டியை காண, டிக்கெட் கிடைப்பது சிரமமாக உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் வரும் 14 முதல் 18ம் தேதி வரை நடக்க உள்ளது. 26-ம் தேதி நான்காவது டெஸ்ட் பாக்சிங் டே போட்டியாக தொடங்குகிறது.