வரதட்சணை சட்டத்தில் சீர்திருத்தம் தேவை என உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர், பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி உள்ளிட்டோர் வரதட்சணை சட்டத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டியதால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில், வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை சட்டங்களை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பாவி ஆண்கள் காப்பாற்ற முடியும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.