100-வது படத்திற்கு இசையமைக்க உள்ள ஜி.வி.பிரகாஷ், தனது சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னணி நட்சத்திரங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தனது 100வது படமாக சிவகார்த்திகேயனின் 25-வது படத்திற்கு இசையமைக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 19 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தில் தனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
இசையமைப்பதிலும், நடிப்பதிலும், பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.