ஜோலார்பேட்டையில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட சக்கரகுப்பம் காலனியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு, தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள் முறையான பராமரிப்பு இன்றியும், ஆங்காங்கே சேதம் அடைந்தும், இடிந்து விழும் நிலையிலும் உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். எனவே, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்னரே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.